கோவை கணபதி-விளாங்குறிச்சி ரோடு விநாயகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 47 )இவர் ஆன்லைன் மூலம் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந்தேதி வீட்டைபூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார்.திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்து 23 பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர் ..இது குறித்து சிவக்குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வீடு புகுந்து திருடியது மணியக்காரன் பாளையம் இளங்கோ நகரில் வசிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது .இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். நகை மீட்கப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.