கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபர் கையும் களவுமாக சிக்கினார்.!!

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு (சி.ஐ.எஸ். எப்.) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் குமார் ராஜ் பரதன். இவர் நேற்று விமான நிலையத்துக்குள் ரோந்து சுற்றி வந்தார். அப்போது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்து இருப்பது தெரிய வந்தது. அவரை கையும் களவுமாக பிடித்தார்.. விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தருண் மாலிக் ( வயது 39) என்பது தெரிய வந்தது. நகைத் தொழில் செய்து வந்தார்..இவர் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி அவரை கைது செய்தார். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.