கோவை காந்திபுரம் பகுதியில் வசிப்பவர் சிந்து. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிந்து காந்திபுரம் 100 அடி சாலை 9வது வீதி, ராஜேந்திர பிரசாத் சாலையில் இவர் வீட்டில் வீடு வாசல் கூட்டிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஐசக் பாபு என்பவர் தன்னுடைய வளர்ப்பு நாயை பிடித்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த நாய் திடீரென்று சிந்துவை கடித்து குதறியது . இதில் சிந்துவின் வலது கை, இடுப்பு, தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது குன்னூரில் சிகிச்சைக்காக சென்று ஊசி போட்டு கொண்டு இருக்கிறார் . பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய் முன்னதாக 10-க்கும் மேற்பட்டோரை கடித்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். நாய்களுக்கான தடுப்பூசி கூட போடவில்லை என்று குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், நாயின் உரிமையாளரிடம் சொல்லியும் மெத்தனமாக நடந்து கொள்வதாக புகார் செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர்..
10 பேரை கடித்த வளர்ப்பு நாய்… மீண்டும் ஒரு பெண்ணை கடித்து குதறியது – பீதியில் அப்பகுதி மக்கள் .!!
