கோவை : தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், போதைப் பொருட்களை ஒழித்திடவும் வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் உத்தரவின் பேரில் கோவை சிவானந்தா காலனி பவர் அவுஸ் அருகில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொங்கு மண்டல செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தைமாநில வர்த்தக அணி துணை செயலாளர் ஸ்டீல் ராஜன் தொடங்கிவைத்தார.மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன் முத்துப்பாண்டி ,நேருஜி, முரளி கிருஷ்ணன் சுரேந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆலடி ஆனந்த் மாவட்ட துணை செயலாளர் சரத் சக்தி மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன் ,கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஐகோர்ட் துரை, வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரூபின் ஸ்டன் புறநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் செல்வபுரம் சேகர் ,, தொண்டரணி மாவட்ட செயலாளர் பால்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் அசரியா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செல்வகுமார் வால்பாறை நகர செயலாளர் மதி குனியமுத்தூர் பகுதி செயலாளர் சுரேஷ் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் லோட்டஸ் துரை,முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பீளமேடு சஞ்சய் .மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சதீஸ்வரி ,லட்சுமி வனஜா கிரிஜா தீபா அமராவதி மாவட்டத் துணை நிர்வாகிகள் இளையராஜா செல்வக்குமார் தம்பு நீலாம்பூர் முருகன் குனியமுத்தூர் ஆறுமுகம் ராஜா ,சரத் சிவா, வேல்முருகன் ,சிங்கை சரவணன் வக்கீல் பாண்டியன் ,முருகன் பறக்கும் படை பாஸ்கரன் ராமநாதபுரம் குட்டி நடராஜ், பல்லடம் தொகுதி செயலாளர் அக்பர் பாய்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.