அடியோடு மாற்றிய இந்தியா… பஹல்காமில் மீண்டும் குவியும் சுற்றுலா பயணிகள்.!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தலம் மினி சுவிட்சர்லாந்து என்று போற்றப்படுகிறது.

பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள். தாக்குதலால் சுற்றுலா பாதிப்புக்கு உள்ளான பஹல்காமில் இப்போது மீண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் மிக அழகான பகுதிகளில் ஒன்று. ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து மறைமுகமாக ஊக்குவிக்கப்படும் தீவிரவாதிகளால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகி வந்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் இருந்தது. நிலைமையும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் வகையில் மாறி இருந்தது. இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக காஷ்மீர் மாநில வருகிறது.

உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளார்கள்.லடாக், ஜம்முவின் பல்வேறு பகுதிகள், காஷ்மீரில் ஸ்ரீநகர், பஹல்காம் உள்பட பல்வேறு பகுதிகள் சுற்றுலா பயணிகள் வருகையால் பொருளாதாரம் உயர்ந்து வந்தது. அந்த மக்கள் பலர் சுற்றுலா தொழிலால் பலன் பெற்று வந்தார்கள். பல திரைப்படங்களும் காஷ்மீரில் அண்மை காலத்தில் படமாக்கப்பட்டன. இந்நிலையில் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகையால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் அதை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.

மினி சுவிட்சர்லாந்து என போற்றப்படும் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் , மலைப் பாங்கான பள்ளத்தாக்கு மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய பகுதியாகும். . இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.

பரந்த புல்வெளியை கொண்ட இந்த அழகான இடம் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாகஇருக்கிறது. இங்கு கடந்த 24ம் தேதி பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் இறங்கி வந்துள்ளார்கள். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். இதில் 27 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்தஇடம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 100 கிமீ தூரம் தள்ளி உள்ள பகுதியாகும்.. இங்கு எப்படி பயங்கரவாதிகள் வந்தார்கள் என்ற கேள்வி எழுந்தது.மேலும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுபபாட்டில் உள்ள சுற்றுலா தலத்தில் எப்படி பாதுகாப்பு படையினர் அத்துமீறி வந்தார்கள் என்ற விவாதங்களும் எழுந்தன. இதனிடையே காஷ்மீர் அரசு சுற்றுலா பயணிகளுக்கு பைசரன் பள்ளத்தாக்கை திறந்துவிட்டது குறித்து முறையாக பாதுகாப்பு படைக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதுபற்றி விசாரணைகள் நடந்து வருகின்றன.

அதேநேரம் சுற்றுலா பயணிகள் மொத்தமாக வெளியேறி காஷ்மீர் வெறிச்சோடிவிடும் என்று எதிர்பார்த்த பயங்கரவாதிகளின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. ஏனெனில் மீண்டும் பஹல்காம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தொடங்கி உள்ளார்கள். பல சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து வீடியோ எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்..