கோவை குனியமுத்துரை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் நகலன் ( வயது 14) அந்த பகுதியில் உள்ளார் பள்ளிக்கூடத்தில் 8-ம் படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த பகுதியில் உள்ள 80 அடி ஆழ கிணற்றில் குளிக்கச் சென்றான். அந்தக் கிணறு யாருமே பயன்படுத்தாதது. அதில் 60 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அவர்கள் 3 பேருக்குமே நீச்சல் தெரியாது என்பதால் அவர்கள் தங்களுடைய வயிற்றில் கயிறு கட்டி உள்ளே இறங்கி தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நகலன் வயிற்றில் கட்டிய கயிறு அறுந்து விட்டது .அவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்தான். மற்ற 2பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அவனை காப்பாற்ற முடியாமல் திகைத்தனர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், என்று கதறினார்கள். ஆனால் அந்த பகுதியில் யாருமே இல்லாததால் உதவிக்கு வரவில்லை. இதனால் அந்த 2 பேரும் கிணற்றில் இருந்து வெளியே வந்து அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். அதற்குள் நகலன் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்தான். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மாணவனின் பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
வயிற்றில் கயிறு கட்டி கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி..
