இருகூரில் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப பலி..

கோவை இருகூர் அருகே உள்ள ஏ. ஜி. புதூர் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன். அவரது மகன் சுதீப் ( வயது 8) அங்குள்ள தொடக்கப்பள்ளி கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று ஏ.ஜி. புதூர், அய்யாசாமி கோவில் குட்டைக்கு குளிக்கச் சென்றான்.குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தான் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பீரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் விசாரணை நடந்து வருகிறது..