கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 62))அந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி (வயது 60)) இவர்களுக்கு சுரேஷ்குமார் ( வயது 34) என்ற மகனும் நித்திய பிரியா (வயது 33) என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது .முருகையன், சரோஜினி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான தோட்டம் அருகே உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுரேஷ்குமார் மேட்டுபாளையத்தில் தன் மனைவி மீனாவுடன் வசித்து வருகிறார். தினமும் தோட்டத்திற்கு செல்லும் போது பெற்றோரை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று வேலை காரணமாக சுரேஷ்குமார் தோட்டத்திற்கு செல்லவில்லை. கணவர் முருகையன் தோட்ட வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் வேலை முடிந்ததும் மகன் சுரேஷ்குமார் மாலையில் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ஆனால் பெற்றோரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தாயார் சரோஜினி கழுத்தை அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் சுரேஷ் குமார் கதறி அழுதார் .மேலும் சரோஜினி அணிந்து இருந்த தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து சிறுமுகை போலீசில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன், டி.எஸ்.பி., பாலாஜி, இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணநடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.போலீஸ் துப்பறியும் நாய் கொண்டு செல்லப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. யாரையும் பிடிக்கவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.. வீட்டில் தனியாக இருந்த சரோஜினி கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு வீட்டில் பீரோவில் இருந்த 12பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது..சரோஜினி கழுத்தில் கிடந்ததாலி செயின், கம்மல் ஆகியவை அப்படியே இருந்தது..சுரேஷ்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வங்கியில் அடமானம் வைத்திருந்த 22 பவுன் நகைகளை மீட்டு பெற்றோர் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.அதில் 12 பவுன் நகைகள் மட்டும்தான் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.10 பவுண் நகை அப்படியே இருந்தது. எனவே நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணத்தினால் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள் வருகிறாகள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது ..இந்த வழக்கில் துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இந்த நிலையில் தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம்- அன்னூர் மெயின் ரோட்டில் தென் திருப்பதி நால்ரோடு பிரிவில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள் அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார் .போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் மூதாட்டி சரோஜாவை கொலை செய்தது ஒப்புக்கொண்டார் .மேலும் அவர் ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் வசந்தகுமார் (வயது 19) என்பதும், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார் .கைது செய்யப்பட்ட வசந்தகுமார் அளித்த வாக்குமூலத்தில் ஆன்லைன் விளையாட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் நஷ்டத்தை ஈடுகட்டவும், நகைக்கு ஆசைப்பட்டு இந்த கொலையை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கொலையாளியை கைது செய்த தனிப்படையை கோவை சரக டி. ஐ .ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பாராட்டினார்கள்.