கோவில்பட்டியை அடுத்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதியது. வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதற்கிடையே இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் கூலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் என்றும், புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த கேசவன் எனவும் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.