கோவை, மருதமலை வனப் பகுதிக்கு அருகே உள்ள சோமயம்பாளையம் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி குப்பை கிடங்கு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அருகே உள்ள மருதமலை வனப் பகுதியிலும் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யானைகளின் வலசை பாதைகளும், வன விலங்குகள் நடமாட்டமும் இருக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே அங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருதமலை வனப்பகுதி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து..!
