வீட்டில் திடீரென பற்றி எரிந்த தீ… ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்.!

கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என் புதூர். கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் பாட்ஷா (வயது 42) இவர் பெங்களூர்வில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி, தாயார், குழந்தைகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடியிருக்கும் வீட்டின் முதல் தளத்தில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி வீட்டிருந்த சேலைகள் நகைகள் , நில பத்திரங்கள், பாஸ்போர்ட் , பள்ளி சான்றிதழ்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. சேதமதிப்பு ரூ .5 லட்சம் இருக்கும். இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாது தடுத்து அணைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.