ஓடும் காரில் திடீர் தீ..!

நீலகிரி மாவட்டம் ஊட்டி எம். பாலாடை சேர்ந்தவர் சியாம் (வயது 42) இவர் நேற்று ஊட்டியில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரமடை மெயின் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது காரின் முன்பகுதியிலிருந்து கறும்புகை வெளியேறியது. இதனால் சுதாரித்துக் கொண்டு சியாம் உடனே காரை ரோட்டின் ஓரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் காரில் முன் பகுதியில் தீப்பற்றியது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் குடத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி தீயணைத்தனர் .இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.