நாமக்கல்: நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிக்கன் ரைஸில், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த பேரனை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் பகவதி… அங்குள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.. இவருடைய தாத்தா வீடு எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த செவ்வாய்க்கிழமை, நாமக்கல் பஸ் ஸ்டாண்டு எதிரே இருக்கும் ஓட்டல் ஒன்றில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.. பிறகு தன்னுடைய குடும்பத்தினர் சாப்பிடுவதற்காகவும், சிக்கன் பார்சல்களை வாங்கியிருக்கிறார்.அந்த சிக்கன் பார்சலில் ஒன்றினை தன்னுடைய தம்பி 18 வயது ஆதிக்கும், 72 வயதுடைய தன்னுடைய தாத்தா சண்முகநாதனுக்கும் வாங்கி தந்திருக்கிறார். மீதமிருந்த சிக்கன் ரைஸ் பொட்டலத்தை தன்னுடைய அம்மாவுக்கு தந்துள்ளார்.
இரவு 8.30 மணியளவில் பகவதியின் அம்மா நதியா, அந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டிருக்கிறார்.. அப்போது பொட்டலத்தை திறந்ததுமே, ஏதோ வித்தியாசமான வாசனை வந்துள்ளது.. எனினும் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு, அந்த வாசனை அவருக்கு பிடிக்காததால், சிக்கன் ரைஸ் சாப்பிடாமலேயே வைத்துவிட்டார்.. ஆனால், தாத்தா சண்முகநாதன் அந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டதுமே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால், உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்… இதற்கு பிறகு நதியாவுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.. இதனால் அவரும் நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சண்முகநாதன் இறந்துவிட்டார்..
இதையடுத்து, மருத்துவமனை தந்த தகவலின் அடிப்படையில் போலீசாரும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இதுகுறித்த விசாரணையில் இறங்கினார்கள்.. தகவலறிந்ததுமே மாவட்ட ஆட்சியர் உமா உடனடியாக சம்பவ இடத்துக்கு கிளம்பி வந்தார்.. கடையில் வாங்கிய அந்த சிக்கன் ரைஸை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.. அப்போதுதான், சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. இதைடுத்து, சிக்கன் ரைஸ் வாங்கிய சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது பகவதி புகார் தந்தார்.. இதையடுத்து, கலெக்டர் உணவு தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டார்.. ஆனால், அந்த தூய்மையாக இல்லாத காரணத்தால், உடனடியாக அந்த உணவகத்திற்கு பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். பின்னர், ஹோட்டல் உரிமையாளர் ஜீவாநந்தனமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.. சிக்கன் ரைஸில் எப்படி பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது? என்ற விசாரணையும் துரிதமாகியது.
இதில் 2 சிக்கன் ரைஸ் பொட்டலத்தில் மட்டுமே பூச்சி மருந்து கலந்து இருந்ததாகவும், அதனால் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது..
காரணம், செவ்வாய்க்கிழமை மட்டுமே, அந்த ஓட்டலில் 70 முதல் 80 சிக்கன் ரைஸ் விற்பனையாகியிருக்கிறது.. ஆனால், மற்றவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை… 2 சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதால், பார்சலை வாங்கிச்சென்ற பகவதியிடமே நாமக்கல் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.. இறுதியில், சிக்கன் ரைஸில் விஷம் கலந்ததை பகவதி ஒப்புக் கொண்டார்…இதையடுத்து போலீசார் பகவதியை உடடினயாக கைது செய்துள்ளனர்.
அதாவது 20 வயதான பகவதிக்கு நிறைய கெட்டபழக்கங்கள் இருக்கிறதாம்.. இதெல்லாம் வீட்டுககு தெரியவந்துள்ளதையடுத்து, தாத்தா, அம்மா என குடும்ப உறுப்பினர்கள் பகவதியை கண்டித்திருக்கிறார்கள்.. அவரது செயல்களை தட்டி கேட்டுள்ளார்கள்.. இந்த ஆத்திரத்தில்தான், சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தாத்தாவுக்கு பேரனே விஷம் கலந்து கொன்ற சம்பவம் நாமக்கல்லில் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.