கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழிராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன் (வயது 21) இவர் நேற்று உக்கடம் பகுதியில் உள்ள பூங்காவுக்கு இசை நிகழ்ச்சி கேட்க தனது நண்பருடன் நடந்து சென்றார். .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் பாலச்சந்திரன் காதின் அருகே சென்று விசில் ஊதினார்கள். இதை பாலச்சந்திரன் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை தாக்கி ,கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றுவிட்டது .இதில் பாலச்சந்திரன் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பாலச்சந்திரன் கடைவீதி போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை முயற்சி ,தாக்குதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கும்பலை தேடி வருகிறார்கள்..