கோவை காந்தி பார்க் தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21) மருந்து குடோனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை புதூர் அண்ணா நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரை குடிபோதையில் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அருண் என்ற ஜோக்கர் (வயது 28 )தனது நண்பரான பூசாரிபாளையத்தை சேர்ந்த ரகு ( வயது 32) என்பவருடன் சேர்ந்து ஆகாஷ் காந்தி பார்க் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது கத்தியால் குத்தினார்கள். இதில் ஆகாஷ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து அருண் என்ற ஜோக்கர் (வயது 28) ரகு (வயது 32) ஆகியோரை கைது செய்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தந்தையை தாக்கிய வாலிபருக்கு கத்திக்குத்து – இருவர் கைது..!
