பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது..!

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள முத்திப்பாளையம், காந்திஜி காலனியை சேர்ந்தவர் அன்பரசு ( வயது 28) எலக்ட்ரீசியன் .இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்து குளித்துக் கொண்டிருப்பதை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை திடீரென அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.. அவரது சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து செல்போனில் வீடியோ எடுத்த அன்பரசுவை கையும் களவுமாக பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..