சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் கிட்டான்..இவரது மகன் பிரகாஷ் ( வயது 22)இவர் நெகமம் பக்கம் உள்ள ஆண்டி பாளையத்தில் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். நேற்று இவர் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றார்.அப்போது திடீரென்று கிணற்றினுள் தவறி விழுந்து இறந்தார்.இதுகுறித்து இவரது தந்தை கிட்டான் நெகமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்..மேலும் விசாரணை நடந்து வருகிறது.
செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்ற வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சோகம்..
