தேசிய நெடுஞ்சாலையில் ஹையாக ஒய்யார நடை போட்ட காட்டு யானை.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே  சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே காரில் சென்றவர்கள் காட்டு யானை நடந்து செல்வதை கண்டு யானையின் அருகே சென்று காரில் பயணித்தபடியே செல்போனில் வீடியோ எடுத்தனர். இதைக் கண்ட காட்டு யானை காரில் இருந்து வீடியோ எடுப்பதை கண்டு கொள்ளாமல் ஜாலியாக ஒய்யாரமாக நடைபோட்டபடி நடந்து சென்றது. தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது..