கூடலூர் வயநாடு பஜாரில் திடீரென்று வந்த காட்டு யானை- தெறித்து ஓடிய பகுதி மக்கள்.!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் சாலையில் நெலாக்கோட்டை பகுதி பஜாரில் திடீரென்று காட்டு யானை ஊருக்குள் நுழைந்து இதனால் அப்பகுதி மக்கள் வழி தெரியாமல் அங்கும் இங்கும் சிதறி ஓடினர் . தற்போது கூடலூர் பல பகுதிகளில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வருவதால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு எந்நேரமும் பாதுகாப்பு இல்லை என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதுபோன்ற திடீர் காட்டிய அணைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு உலாவி வருவதால், பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் எந்த நேரமும் பாதுகாப்பில்லை என்று கூறுகின்றனர். நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை முழுமையாக கண்காணித்து பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூடலூர் தன் ஆர்வலர்கள் மற்றும் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திடீரென்று வந்த அந்த காட்டு யானை கேரளா வழி வயநாடு செல்லும் நெலக்கோட்டை சாலை பகுதியில் அந்தக் காட்டு யானை ஆக்ரோஷத்தோடு சட்ட சத்தமிட்டு துரத்தி வந்தது. அவ்வழியாக பத்தேரி சாலையில் இருந்து வந்த காரைத்தாக்கி தந்தத்தால் குத்தி காரை புரட்டிப் போட்டு காரை பள்ளத்தில் தள்ள யானை முயற்சி செய்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சப்தம்  இட்டதால் கார் பள்ளத்தில் செல்லாமல் பாதுகாக்கப்பட்டது. காரில் இருந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் உயிர் தப்பினர். இச்சம்பகத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து காட்டு விலங்குகளால் கூடலூர் பல பகுதிகளில் வாழும் பொதுமக்கள் நிம்மதியை இழந்து உள்ளனர். தொடர்ந்து காட்டு யானைகள் மனிதர்கள் வாழும் இடத்தில் வந்து தாக்குவதை கூடலூர் முதுமலை வனத்துறையினர் கண்காணித்து தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் மற்றும் பகுதியில் கல்லூரி பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் பெற்றோர்கள் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கும் வனத்துறைநிற்கும் தங்களது கோரிக்கையை முன் வைத்துள்ளனர்..