திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர் பழைய தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர்.நாராயணன் வயது 48. இவர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மகன் மற்றும் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவை வழங்கிவிட்டு நாராயணன் மனைவி பிரசாந்தி தர்மராஜா கோயில் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் பக்கத்தில் சிறிய பாலம் அருகே செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் முகமூடி அணிந்து பிரசாந்தி கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு ஐந்து சவரன் பறித்து சென்று விட்டதாக திருத்தணி போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் இன்ஸ்பெக்டர் மதியரசன் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசி டிவி கேமராக்களை போட்டு பார்த்தனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தெரிய வந்தது . இது பற்றி போலீசார் பிரசாந்தியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அவளும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. நான் பொய் சொல்லி விட்டேன் .எனது அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. அவருக்கு உதவி செய்யவே திருத்தணி கவரை தெருவில் உள்ள விநாயகா ஜுவல்லரியில் நகையை அடகு வைத்து விட்டு ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றதை ஒப்புக்கொண்டாள் . இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் பிரசாந்தியை கூப்பிட்டு எங்கள் நேரத்தை வீணடித்து விட்டாயே. உண்மையை சொல்லி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்..