எப்.சி.ஐ. குடோனில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாப பலி..

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சலீம் (30)இவர் கோவை பீளமேடு காந்திமா நகர், எப். சி. ஐ .குடோனில் தனது அண்ணனுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 9 – ந் தேதி பெயிண்ட் அடிப்பதற்காக அலுமினிய ஏணியை தள்ளி சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே மின் வயரில் ஏணிப்பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் முகமது வாசிம் பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் திருவாசகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..