கோவை : அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிப்பின். இவர் குடும்பத்துடன் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம் பராமரிப்பு வேலை செய்து வருகிறார். இதற்காக குடும்பத்துடன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி உள்ளனர். இவர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆன மாலதி கர்மகர் (வயது 21) என்பவரை காதலித்து வந்தார். அவரை அழைத்துக் கொண்டு கோவைக்கு வந்தார். காதலியும் அவரது வீட்டில் தங்கியிருந்தார். நேற்று மாலதி கர்மாகர் தனது முதல் கணவரிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்த நிப்பின் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்..பின்னர் தூங்கச் சென்று விட்டார். இந்த நிலையில் மாலதி கர்மாக்கரை திடீரென்று காணவில்லை தேடிப் பார்த்தபோது கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி , சப் இன்ஸ்பெக்டர் நஸ்ரின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவை கல்லூரி வளாகத்தில் வடமாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..
