கோவை பக்கம் உள்ள தெலுங்குபாளையம், சிதம்பரம் காலணியை சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர்அங்குள்ள நாராயணசாமி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக சென்ட்ரிங் ராடு , இரும்பு போன்ற சாமான்களை வீட்டினுள் வைத்திருந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவில் யாரோ அந்த சாமான்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மோகன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து செல்வபுரம் தேவேந்திரர் வீதியை சேர்ந்த பாஸ்கர் ( வயது 28) என்பவரை நேற்று கைது செய்தார். இவரிடம் இருந்து 10 கிலோ சென்ட்ரிங் ராடு பறிமுதல் செய்யப்பட்டது.
புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இரும்பு திருட்டு – வாலிபர் கைது..!
