காதலிக்க மறுத்த நர்சுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.

கோவை ஏப் 24 கோவை குனியமுத்தூர், குளத்துப்பாளையம், கே.பி.ஆர். காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 24 )இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். ஒரு வருடத்துக்கு முன்பு டவுன் ஹாலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தார். அப்போது முகம்மது தனிஷ் (வயது 25) என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது .பின்னர் முகமது தனிஷ் திருமணம் ஆனவர்என்பதை தெரிந்ததும் வெண்ணிலா அவருடன் தொடர்பு துண்டித்துக் கொண்டார் .இதனால் ஆத்திரமடைந்த முகமது தனீஸ் அவருக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து வந்தார் .இந்த நிலையில் வெண்ணிலாவும் அவரது கணவர் ரவியும் நேற்று குளத்து பாளையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முகமது தனிஷ் வெண்ணிலாவிடம் தகராறு செய்தார். இதை தட்டி கேட்ட அவரது கணவரை தாக்கினார். பின்னர்பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து வெண்ணிலா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து உக்கடம் ,அன்பு நகர், 3 -வது வீதியைச் சேர்ந்த சாதிக் மகன் முகமது தனிஷ் (வயது 25) என்பவரை கைது செய்தனர் இவர் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.