கோவை சிங்காநல்லூர் போலீசார் நேற்று அதிகாலையில் உழவர் சந்தை அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு ஒரு கார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தது. உடனே போலீசார் அந்தக் கார் அருகில் சென்று பார்த்தபோது காருக்குள் ஒரு வாலிபர் இருந்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனை செய்தனர். அப்போது காரில் ஒரு துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் சிங்காநல்லூரை சேர்ந்த அன்பு செல்வன் (வயது 34) என்பதும் காருக்குள் இருந்த துப்பாக்கி பலூன் சுடுவதற்கு பயன்படுத்தக்கூடிய ” ஏர்கன் ” என்பது தெரியவந்தது உடனே போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர் .அன்புச்செல்வன் எச்சரித்து அனுப்பப்பட்டார்.
சிங்காநல்லூரில் காரில் துப்பாக்கியுடன் பிடிபட்ட வாலிபர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்..!
