கோவை புலிகுளம், ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் சதீஷ் பெயிண்டர்.இவரது மனைவி கவுரி சினேகா (வயது 21 ) இவர்களுக்கு 2 வயதில் ஸ்ரீ சானா என்ற குழந்தை உள்ளது..இந்த நிலையில் கவுரி சினேகா நேற்று முன்தினம் திடீரென்று தனது கைக் குழந்தையுடன் மாயமானார் . இது குறித்து அவரது கணவர் சதீஷ் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கவுரி சினேகா கல்லுக்குழி பகுதி சேர்ந்த சஞ்சீவ் என்பவருடன் திருமணத்துக்கு முன் காதல் வைத்திருந்தாராம். பிறகு அவர்களுக்குள் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்தது. கடந்த ஒரு வாரமாக மீண்டும் காதல் தொடர்ந்தது .இந்த நிலையில் கவுரி சினேகா தனது முன்னாள் காதலன் சஞ்சீவுடன் எங்காவது? மாயமாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
2 வயது குழந்தையுடன் இளம்பெண் திடீர் மாயம்… முன்னாள் காதலனுடன் ஓட்டமா..?
