கோவை மாவட்டம் அன்னூர், ஒட்டர் பாளையம்,பக்கம் உள்ள பூலுவபாளையத்தை சேர்ந்தவர் பிரதீப் ( வயது 38 )ஏ.சி. மெக்கானிக்.இவர் நேற்று முன்தினம் விளாங்குறிச்சி ரோடு காந்தி வீதியில் உள்ள தினேஷ் என்பவரது வீட்டில் ஏ.சி.மிஷின் பழுது பார்க்க சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி ஜனனி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
மாடியில் இருந்து தவறி விழுந்து ஏ.சி.மெக்கானிக் பரிதாப பலி..
