குன்னூர் மேட்டுப்பாளையம் சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துகள்.!!

நீலகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத்துறை தற்போது சாலைகளை விரிவாக்கப்படும் பணிகள் தொடர்ந்து வருகிறது. இப்பகுதியில் சமீப காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பர்லியார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியை நோக்கி உதகை கப்பத்தொரையை சார்ந்த பெல்லோரோ ஜீப் வாகனம் அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்றொருவர் காயங்களுடன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து அவ்வழியாக சென்ற நீலகிரி மாவட்ட தமுமுக நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்போது குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் முந்தைய  நாட்களில் இருந்த சாலை தற்போது விரிவாக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மட்டுமே சாலைகள் விரிவாக்கப்படுகின்றன. ஆனால் இருசக்கர வாகனம் ஜீப் கார் லாரிகள் தனியார் பேருந்துகள் போன்ற ஓட்டுநர்கள் அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள் ஆகிறார்கள். இதை தடுக்க காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்து போக்குவரத்து விதிமுறைகளின் அறிவுரை பலகைகளை வைத்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி உள்ள மக்கள் வேண்டுகோள் இடுகின்றன, தொடர்ந்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க எச்சரிப்பு பலகைகளை மற்றும் வேகத்தடைகளை அமைத்து தர போக்குவரத்து துறை மற்றும் நீலகிரி மாவட்டம் நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஓட்டுநர்கள் மற்றும் பயணிக்கும் பொதுமக்கள் தன்னார்வலர்கள் வலியுறுத்தி கூறினர்..