ஆவடி பகுதியை சேர்ந்தவர் முகமது அஜீஸ் (43) இவர் தன்னுடன் படித்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த விஜய் மற்றும் அவனது நண்பன் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரும் இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அட்வைசர் அன்ட் கன்சல்டன்ஸ் என்ற பெயரில் கம்பெனி நடத்தி வருவதாகவும் அதில் தனக்கும் தனது நண்பனுக்கும் 50 க்கு 50 லாபத்தில் பங்கு கொடுப்பதாக விஜய் ஆசை வார்த்தை கூறியுள்ளான் .நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதாமாதம் 4 சதவிகிதம் தருவதாக அதாவது ரூ.4 ஆயிரம் தருவதாக ஆளை மயக்கும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளான். இந்த தொழிலை 7க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷேர் மார்க்கெட் பிசினஸ் நடத்தியதாக கோடிக்கணக்கில் லாபம் வந்துள்ளதாக ரீல் ரீலாக கதை விட்டுள்ளான். இதை உண்மை என்று நம்பிய முகமது அஜீஸ் தானும் தனக்கு தெரிந்த உறவினர்களிடமும் நண்பர்களிடமும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் உட்கார்ந்து இடத்திலேயே பணத்தை சம்பாதிக்கலாம் நீங்கள் ஏன் சம்பாதிக்க வேண்டும் பணத்தை போடுங்க லாபத்தை அள்ளுங்க எனது ஆசை வார்த்தை கூறினார். அவர்களும் 450 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூபாய் 65 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமார்ந்துள்ளனர். முதலீடு பணமும் வரவில்லை லாபத் தொகையும் வரவில்லை என்ற ஏக்கத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் செய்தனர். அதன் பேரில் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பெருமாள் மேற்பார்வையில் கூடுதல் துணை ஆணையர் ஸ்டீபன் ஆய்வாளர் சுபாஷினி ஆகியோர் போலீஸ் படையினரோடு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விஜய் (32) தகப்பனார் பெயர் ஜெய்சங்கர் கைது செய்தனர் .அவனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் சிறையில் அடைத்தனர் . போலீஸ் தேடுவதை அறிந்த கூட்டாளி விஜயின் நண்பன் சுந்தரமூர்த்தி தலை மறைவாகி விட்டான்..