கடன் தருவதாக வலைவிரிக்கும் ஆப்கள் குறிவைப்பது எளிய மக்களை தான். `3,000 லோன் தருகிறேன். 5,000 லோன் தருகிறேன்’ என அவர்களை ஏமாற்றுவதோடு, மொபைல் போனில் உள்ள அவர்களின் தனிப்பட்ட தரவுகளையும் இந்த போலி ஆப்கள் கொள்ளையடிக்கிறது.
இந்நிலையில், உடனடி லோன் எளிதாக தருவதாக கூறி மக்களை குறிவைத்து ஏமாற்றும் சீன கடன் ஆப்களை அரசும், ரிசர்வ் வங்கியும் கண்டறிந்து அவற்றை தடுக்கும் முயற்சியை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மக்களை ஏமாற்றி வரும் சீன கடன் செயலிகள் குறித்து மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம். பி. நிதிமுல் ஹக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 6-7 மாதங்களில் மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சகம், கம்பெனிகள் விவகாரத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல ஆலோசனை கூட்டங்களை நடத்தினேன்.