ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஐபிகள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி சினிமா நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடிகை சமந்தா பண்ணாரி அம்மனை வணங்கி சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்ததும் நடிகை சமந்தா கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடிகை சமந்தாவை பார்த்து அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..
பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்.!!
