திருவேற்காடு நகராட்சியில் வீடுகட்ட அனுமதி பெற அலைகழிப்பு செய்யப்படுகிறது என பொது மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
திருவேற்காடு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.இந்த நகராட்சியில் 18, வார்டுகள் உள்ளன.ஏராளமான வீட்டு மனைகள் காலியாக உள்ளன.மேலும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேரூந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ.தூரம் உள்ளதால், பலர் திருவேற்காட்டில் வீட்டுமனை வாங்கி புதியதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.பல புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.
இப்படி புதியதாக வீடு கட்ட அனுமதி பெற வேண்டும் என்றால் , சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மனை பிரிவிற்கு அனுமதி பெற்று இருக்க வேண்டும்.இப்படி அனுமதி பெற்ற வீட்டுமனைக்கு காலி மனை வரி கட்ட வேண்டும்.
அதன் பிறகு நகராட்சியால் அங்கீகாரம் பெற்ற லைசன்ஸ் சர்வேயர்கள் வீடு கட்ட வரைப் படம் வரைந்து, ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். இப்படி சமர்பிக்கப் பட்ட விண்ணப்பங்களை நகரமைப்பு ஆய்வாளர் சரி பார்ப்பார். வரைப் படம் சரியாக இருந்தால், நகராட்சி ஆணையாளரும் , நகரமைப்பு ஆய்வாளரும் வீட்டு மனை காலியாக உள்ளதா அல்லது கட்டுமானப் பணிகள் நடைபெற்று உள்ளதா என ஆய்வு செய்வார்கள்.ஆய்வில் வீட்டு மனை காலியாக இருந்தால் வீடு கட்ட வரைப் படம் அனுமதிக்கு அபிவிருத்தி கட்டணம்,ஆய்வு கட்டணம் கட்டுவதற்கு ஆணை வழங்கப்படும்.கட்டணம் கட்டிய பிறகு வீடு கட்ட வரைப் பட அனுமதி ஆன் லைனில் வழங்கப்படும்.
ஆனால் மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி வீடு கட்ட வரைப் படம் அனுமதி வழங்க கால தாமதம் ஏற்படுகிறது. கட்டணம் கட்டுவதற்கு ஆணை வழங்க பல நாட்கள் ஆகிறது.இதனால் புதியதாக வீடு கட்டுவதற்கு வரைப் படம் அனுமதி விரைவாக வழங்க வேண்டும்
நகராட்சி நிர்வாகம் சீரழிந்து போய் உள்ளது நாள்தோறும் நகர அமைப்பு பிரிவில் பொதுமக்கள் திருவிழா கூட்டம் போல் கைக்குழந்தைகளோடு ஏக்க பெருமூச்சு வோடு இன்றாவது அனுமதி கிடைத்து விடுமா என காத்து கிடைக்கின்றன இந்த விஷயத்தில் அமைச்சர் பி கே சேகர் பாபு நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயன் ஐஏஎஸ் ஒரு முடிவு எடுப்பார் என மக்கள் காத்து கிடக்கின்றனர்