நக்சலைட் இயக்கத் தலைவன் சோமன் வயநாடு அருகே தீவிரவாதி எதிர்ப்பு படை போலீசாரால் கடந்த 3 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவரிடம் நக்சலைட் இயக்கத் தடுப்பு படை போலீசார், உளவு பிரிவு , கியூ பிராஞ்ச் போலீசார் என பல்வேறு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அகழி டி.எஸ்.பி .அசோகன் தலைமையில் போலீசார் சோமனை இன்று அகழி பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பகுதியில் வன அதிகாரியை தாக்கியது உள்ளிட்ட 4 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அழைத்துச் சென்றனர். அவரை இன்று போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது கேரள முதலமைச்சர், காவல்துறை, வனத்துறைக்கு எதிராக சோமன் கோஷங்கள் எழுப்பினாராம்..