மதுரை: தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுக கட்சி. அதிமுகவின் பொன்விழா ஆண்டு இது: 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்தோம்.
எடப்பாடி பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவன் என்று எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேசி உள்ளார்.
அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி. அங்கே 51 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 51 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் மலர் தூவ கொடி கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடக்கிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது .
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் அதிமுகவில் நடக்கும் மிகப்பெரிய மாநாடு இது. எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் நடக்கும் முதல் மிகப்பெரிய மாநில மாநாடு இது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சென்னை, கொங்கு, தென் மண்டலங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இந்த எழுச்சி மாநாடு காரணமாக அதிமுக புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை பொதுக்கூட்டத்தில் பேச்சு கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். அவர் உருவாக்கிய கட்சி அதிமுக.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுக கட்சி. அதிமுகவின் பொன்விழா ஆண்டு இது: 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்தோம். எடப்பாடி பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவன்.
இங்கே உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் உழைப்பாளிகள். அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை. அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், கொம்பனாலும் முடியாது.
தொண்டன் உழைப்பால் உருவானது அதிமுக. 10 வருடம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். புயல், வெள்ளம், கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டோம்.
கொரோனா பற்றி தெரியாத போதும் கூட அதன் பரவலை தடுத்தோம். மதுரை மண் ராசியான மண், இங்கே தொடங்கியது எல்லாம் வெற்றிதான். முதல் மாநாட்டை இங்கே நடத்துவது மகிழ்ச்சி.
காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்தது அதிமுகதான் . உச்ச நீதிமன்றத்தில் இதற்காக தீர்ப்பை பெற்ற அரசு அதிமுக அரசு. நான் விவசாயி.. அதன்பின்தான் அரசியல்வாதி. விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.