கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பும் அதிமுக..
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுடன் அதிமுகவினர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராகவும் மற்றும் அதிமுக சட்டவிதிகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதிமுகவினர் சபாநாயகர் அப்பாவை சந்தித்து பேசி வருகின்றனர்.
இன்றுடன் தமிழ்நாடு கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பியுள்ளனர். அதிமுக கொறடா வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் சபாநாயகருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், பேரைவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அமரவைக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு கோரிக்கையாக உள்ளது.