கோவை ஆர். எஸ் புரம் தேவாங்க பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று அஜித் நடித்த துணிவு படம் வெளியிடப்பட்டது . அங்கு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் முன் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்தாராம். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சண்முகசுந்தரம் அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் கருப்பண்ணகவுன்டர்
வீதியைச் சேர்ந்த சந்துரு ( வயது 25 )என்பது தெரிய வந்தது .இவர் கார் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வந்தார். பின்னர் இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.