சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழ முதல்வர் மு.க ஸ்டாலினின் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர்களை இன்று காலை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்தார்
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் பயணிகள் பலியாகியுள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த ரயில் விபத்து காரணமாக ஒடிசாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நினைவிடம், ஓமந்துராரில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக இன்று காலை 8 மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.