பசு வதை தடுக்கப்பட்டாலே பூமியின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்- குஜராத் நீதிமன்றம்..!

மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் அதே வேளையில், பசு வதை தடுக்கப்பட்டால் பூமியின் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கூறியுள்ளது.

16 க்கும் மேற்பட்ட பசுக்களையும் அவற்றின் சந்ததியினரையும் உட்காரவோ, உண்ணவோ, குடிக்கவோ முறையான ஏற்பாடுகள் இல்லாமல் நிரம்பிய லாரியில் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதற்காக முகமது அமீன் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.