தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற சிறை துறை பணியாளர்களின் வாரிசுகளை நேரில் அழைத்து பாராட்டிய அமரேஷ் புஜாரி-வீடியோ இணைப்பு.!

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணியாற்றும்
பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா பல்கலைக்கழகத்தில் 25.08.2023 முதல் 27.08.2023 வரையில் நடத்தப்பட்டன.  அப்போட்டியில் ஏழு பேர் கலந்து கொண்டு அனைவரும் பதக்கங்களை வென்றனர்.
அதில் 3 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும், 3 வெங்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளனர். புழல் மத்திய சிறையில் பணியாற்றும்  சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் 5 பதக்கங்களையும், மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் 2 பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
 
அமரேஷ் புஜாரி, காவல்துறை இயக்குநர் / சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் பதக்கங்களை வென்ற சிறைப் பணியாளர்களின் வாரிசுகளை நேரில் அழைத்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் இரா.கனகராஜ், சிறைத்துறை டி.ஐ.ஜி (தலைமையிடம்) மற்றும் ஆ.முருகேசன், சிறைத்துறை டி.ஐ.ஜி, சென்னை சரகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பயிற்சி அளித்த எஸ்.ராஜரத்தினம், முதல் நிலைக் காவலர்,  பி.மாரிசெல்வம், முதல் தலைமைக் காவலர்,  ராஜேஷ்வரன், பயிற்சி ஆசிரியர் மற்றும் ஆர்.பவானி, ஊட்டச்சத்து ஆலோசகர் ஆகியோருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்..