அம்மன் கோவில் பூட்டை உடைத்து சாமி நகைகள் திருட்டு.!!

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு -சரவணம்பட்டி ரோட்டில் அருள்மிகு. பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த சாமியின் 2 பவுன் தங்கச் செயின், மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் குருக்கள் கிட்டான் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..