கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே. புதூர் சாரதா நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் லோகேஸ்வரன் ( வயது 20) அந்த பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் பூனை வளர்த்து வருகிறார். அந்த பூனைக்கு பால் வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து ஏதோ சத்தம் கேட்டு விழித்து வெளியே வந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பரமசிவம் (வயது 70) என்பவர் அந்தப் பூனை மீது கற்களை வீசி கொண்டிருந்தாராம். இதை மாணவர் லோகேஸ்வரன் தட்டி கேட்டார் .இதனால் ஆத்திரமடைந்த அந்த முதியவர் பரமசிவனை கல்லால் லோகேஸ்வரனை தாக்கினார். இதில் அவருக்கு இடது கண் பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராஜா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். -இது தொடர்பாக முதியவர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். இவர் வணிகவரித்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்..