திருப்பூர் மாவட்டம்: தாராபுரத்தில், என் மண் என் மக்கள் மூன்றாம் கட்ட யாத்திரை நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காமராஜபுரம், சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, பூகடைக்கார்ணர், அமராவதி ரவுண்டானா,பேருந்து நிலையம், ஃபயர் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். தாராபுரம் புதிய காவல் நிலைய வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தாராபுரத்திற்கு தேர்தல் வாக்குறுதியாக எட்டு வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் விவசாயிகளுக்கு குளிர் பதன கிடங்கு அமைத்து தருதல், தாராபுரத்திற்கு அரசு தலைமை மருத்துவமனை கொண்டு வருதல், ராஜவாய்க்காலை தூய்மைப்படுத்துதல், தாராபுரத்தில் உள்ள புரவழிச்சாலை மேம்பாலத்தை ஐடிஐ கார்னரில் இருந்து அலங்கியம் ரோடு வரை விரிவாக்கம் செய்தல், ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு ரயில் பாதை கொண்டு வருதல், அரசு கலைக்கல்லூரி உடனடியாக கட்டிக் கொடுத்தால் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றைக் கூட தாராபுரம் தொகுதி எம்எல்ஏ நிறைவேற்ற வில்லை என குற்றம் சாட்டினார்.
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி. மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்காக கொடுத்த நிதியில் 16,ஆயிரம் கோடி ரூபாய் நிதியிலிருந்து 6000 கோடி மட்டும் செலவு செய்து விட்டு மீதி பத்தாயிரம் கோடி ரூபாயை திருப்பி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது.
இதனால் பட்டியல் இன மக்களின் சலுகைகள் பாதிப்படைந்தன என தெரிவித்தார்.
இந்தியாவில் மட்டும் 47 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது. தனி மனித வருமானம் உயர்ந்திருக்கிறது. உள்நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு சரி செய்து உள்ளது. 3-வது முறையாக மோடி 2024-ம் ஆண்டு பிரதமராக அமரும்போது இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும்.தற்போது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பேமிலி கோட்டாவில் உள்ளனர். குடும்ப கோட்டாவில் சீட் வாங்கி ஜெயிப்பதுதான் தி.மு.க.வின் பார்முலா என்றும், முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை வாரிசு அரசியல் கூடாது என்றார். அவரது கொள்கையை கடைபிடிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும்தான். தி.மு.க. அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. ஏழை மக்களின் வலி அவர்களுக்கு தெரியாது. தமிழகத்தின் கஞ்சா தலைநகராக மாற்றுவதற்கு தி.மு.க. துடித்துக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் ஒழிக்க வேண்டிய நேரம் உங்களுக்கு வந்து விட்டது. என நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.