கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அதிகாலையில் ஒரு கார் வெடித்து சிதறியது இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியில் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.கோவிலின் முன் பகுதி சேதமடைந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது .ஜமேஷா முபின் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனம் வெடிமருந்து உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அல்கா, முகமது அசாருதீன் ,முகமது ரியாஸ் பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ், இஸ்மாயில் ,அப்சர் கான் ஆகிய 6 பேரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என் ஐ.ஏ) மாற்றப்பட்டது. அதன் பின் இந்த வழக்கில் உமர் பருக், பெரோஸ்கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை என் ஐ. ஏ அதிகாரிகள் கைது செய்தனர் .தொடர்ந்து இதுவரை இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 11 பேர் மீதும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் உக்கடம் ஜி .எம் .நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ்(வயது 25) என்பவரை என் ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர் .தொடர்ந்து அவரை பலத்த பாதுகாப்புடன் என் ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர் கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபீனின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்த சம்பவத்துக்கும் முகம்மதுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் அவர் ஆரம்பத்தில் இருந்தே விசாரணை வளைத்துக்குள் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் மீது உறுதியான ஆதாரங்களை சேகரிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டது .அதில் குறிப்பாக அவரின் செல்போனில் 3 ஆண்டுகால அழைப்புகளை ஆய்வு செய்ததில் சில ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என் ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜரானார் .தொடர்ந்து நேற்றும் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து முகமது இத்ரீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை 12 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.