கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது – என்ஐஏ அதிரடி நடவடிக்கை..!

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடித்தது .அந்த காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின்(வயது 27) உயிரிழந்தார் ..இதை யடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வெடி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் பயங்கர சதியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த முகமது தர்கா, முகமது அசுருதீன்,முகமது ரியாஸ்’ முகமது நவாஸ் இஸ்மாயில், பெரோஸ் இஸ்மாயில், அப்சர் கான், உமர் பாரூக் முகமது தவ்பிக், முகமது இத்ரிஸ் உட்பட 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜமேசா முபீனுடன் சேர்ந்து பயங்கர சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் உயிரிழந்த ஜமேஷாமுபீனுக்கு ஐ.எஸ் .அமைப்புடன் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கைதான நபர்களின் வீடுகளில் என் ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் இந்த சம்பவத்தில் ஜமேஷாமுபீனுக்கு உதவியாக இருந்தவர்கள் குறித்து என். ஐ..ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் சந்தேக நபர்களின் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் ( வயது 26) என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை என்.. ஐ.ஏ அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதில் அவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். இதை யடுத்து என் ஐ ஏ அதிகாரிகள் கோவை போத்தனூர் திருமலை நகருக்கு சென்றுதாஹா நசீரை நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து அவரை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். உயிரிழந்த ஜமேசா முபீனுக்கு எந்த வகையில் உதவி செய்தார் ?என்பது தெரியவில்லை. எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய என் ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் இதற்காக அவர்கள் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.தாஹா நசீர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கைதான வர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது..