கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவு ஜூனியர் என்ஜினியராக பணிபுரிந்து வருபவர் விமல்ராஜ். இவருக்கு கோவை வஉசி பூங்கா அலுவலகத்தில் நிர்வாக அலுவலகம் உள்ளது. இவர் மாநகராட்சி சார்பில் வஉசி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வை யிடுகிறார். இந்த நிலையில் விமல் ராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மாலையில் மணிக்கு லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் விமல் ராஜின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது விமல் ராஜின் மடிக்கணினி பையை சோதனை செய்தபோது அதில் கணக்கில் வராமல் ரூ 1 லட்சத்து 2 ஆயிரம் பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.. உடனே அந்த அலுவலகத்தை பூட்டி விமல் ராஜிடம் அந்த பணம் குறித்த விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக கண்காணிப்பு குழு முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள் . இதையடுத்து என்ஜினியர் விமல் ராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த தகவலை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர். கணக்கில் வராத பணத்துடன் ஜூனியர் என்ஜினியர் லஞ்ச ஒழிப்பு போலீசில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
கோவை மாநகராட்சி இன்ஜினியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை – ரூ.1 லட்சம் பறிமுதல் ..!
