நீலகிரியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.!

நீலகிரி மாவட்த்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கிரமங்களுக்கும் நீலகிரி மாவட்ட
காவல் துறை சார்பில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைகாவல் காண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 615 காவல் துறையினர் நீலகிரி மாவட்டத்தில் 210 கிராமங்களுக்கு சென்று கிராம மக்களை சந்தித்து கள்ளச்சாராயம், சில்லரை மது விற்பனை மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக
விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் தீமைகளை எடுத்து கூறியும் கிராம மக்களுடன் கலந்துரையாடி இது போன்ற சட்டவிரோத செயலில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபடாமலிருக்க அறிவுரை வழங்கியும், யாரேனும் இது போன்ற செயலில் ஈடுபடும்  பட்சத்தில் 9789800100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கிராம மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுக்காலாம் என நீலகிரி மாவட்ட காவல் துறை
சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..