ஆப்பிள் ஷூ அமெரிக்காவில் ஏலம்… ஒரு ஜோடி ரூ.41 லட்சம்.. அப்படி என்ன ஸ்பெஷல் கேட்கிறீங்களா..?

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில், ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ சுமார் ரூ.41 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

1990களில் தயாரிக்கப்பட்ட இந்த ஷூவை, வேறு எங்கும் இனி பெற முடியாது என்பதால் வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஏலங்களில் ஆப்பிள் தயாரிப்பு அதிக விலைக்கு எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்..