கோவையில் பெண் காவலரின் மனிதாபமான செயலை மாவட்ட காவல் எஸ்.பி.பத்ரி நாராயணன் பாராட்டி கௌரவித்தார்.
மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் ஆமினா, மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத நிலையில் கண்டறியப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டு, முன்னிருந்து முறையாக இறுதி சடங்கை நடத்தி அடக்கம் செய்துள்ளார்.
இந்த மனிதாபிமானமிக்க நற்செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன், மாவட்ட காவல் அலுவலகத்திற்குப் பெண் காவலர் ஆமினாவை அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.