கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஷன் குமார் ( வயது 21) இவர் நெகமம் அருகே உள்ள ‘ அக்ரி புட் ‘தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 2 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று செல்போனில் பேசி தனது காதலியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாராம். பின்னர் அவர் அந்த நிறுவனத்தில் உள்ள வேப்பமரத்தில் துண்டை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனந்த நாயகி சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் . மேலும் விசாரணை நடந்து வருகிறது.
காதலியுடன் தகராறு : வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..
