நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக குழந்தைகள் உள்பட அனைத்து மக்களையும் நாடுகடத்திய போர்க்குற்றத்திற்காக புதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக பிடிவாரண்ட்டை பிறப்பித்தது.
கூடுதலாக, இதேபோன்ற குற்றச்சாட்டில் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. ரஷ்யா உலக குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் இல்லை என்பதால், எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் நீதிமன்றம் புதின் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்தது என தெரியவில்லை.
உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து குற்றங்கள் நடந்ததாக ஐசிசி கூறியது. “குழந்தைகள் உள்ளிட்டவர்களை சட்டவிரோதமாக நாடுகடத்தியது உள்ளிட்ட பல குற்றங்களுக்கு
தனிப்பட்ட விதத்தில் பொறுப்பாவார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன,” என்று நீதிமன்றம் நம்புகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்க, பிடிவாரண்டுகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நாடுகளால் விசாரிக்க முடியாததை கடைசி முயற்சியாக விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், ரஷ்யாவின் படையெடுப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பிடிவாரண்ட்களுக்கு இவரின் செயல்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.